இலங்கையில் பஸ் பிரயாணம் செய்வோருக்கு புதிய அப் வசதி..!

இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் தொடர்பில் பயணிகளுக்கு கைப்பேசி செயலி (Passengers App) ஒன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

சில தனியார் பஸ்கள் மந்தகதியில் பயணத்தில் ஈடுபடுவதால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் அதிக வேகத்தில் பயணிப்பதால் ஏற்படும் விபத்துகளை தவிர்ப்பதற்காகவும் இது அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் பயணிகள் நேரத்தை சேமிப்பதற்காகவும் கைப்பேசி செயலியொன்றை அறிமுகப்படுத்துமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அதன்படி கைப்பேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் பயணிகள் போக்குவரத்து சேவையை துரிதப்படுத்தல் மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தலுக்காகவும், பஸ் வரும் வரையில் காத்திருக்காமல் பஸ் வருகிறதா? இல்லையா, தாம் பயணிக்க எதிர்பார்த்துள்ள நேரத்துக்கான பஸ் எந்த இடத்தில் (Location) வந்து கொண்டிருக்கிறது என்பவற்றை அறிந்துகொள்வதற்காக இந்த செயலி மூலம் வசதி செய்து கொடுப்பதே தமது நோக்கம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply