
கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
- இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது- வளிமண்டலவியல் திணைக்களம்
- கொழும்பில் இருந்து பயணித்த பேருந்தில் கொரோனா தொற்றாளர்!
- தூக்கில் தொங்கி உயிரிழந்த வைத்தியர்! முல்லைத்தீவில் சம்பவம்
- முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆலயப்பகுதியை ஆக்கிரமிக்க முயற்சியா?
- வவுனியா பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட 864 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் வழங்கி வைப்பு!
கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இலங்கையில் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் வைரஸினால் ஏற்படக்கூடிய ஆபத்தை அலட்சியம் செய்கின்றதாக கூறிய அவர், இரண்டாவது சுற்று வைரஸ் தாக்கத்தினை தவிர்க்கவேண்டுமென்றால், உலக சுகாதார ஸ்தாபனமும் சுகாதார அமைச்சும் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இலங்கை வைரஸ் பரவுதலை ஆரம்பகட்டத்திலேயே முறியடித்துவிட்டது எனினும் எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து தலைதூக்கலாம் எனவும் அவர் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Be the first to comment