கொரோணாவால் கதி கலங்கி நிற்கும் சென்னை; கூட்டமாக வெளியேறும் மக்கள்..!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று முதல் ஜூன் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர வேறு எதற்கும் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் ஊரடங்கு அமலுக்கு வந்ததையடுத்து அண்ணாசாலை மூடப்பட்டது. அத்துடன் அண்ணாசாலையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர பணிகளுக்கு செல்லும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் அண்ணாசாலையில் அனுமதிக்கப்படவில்லை.

அதேபோன்று சென்னையின் பிரதான சாலைகள் மூடப்பட்டு மாநகரம் முழுவதும் 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊரடங்கை மீறி வெளியே செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வெளியே வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் செங்கல்பட்டு சுங்கசாவடியில் ஏராளமான வாகனங்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கின்ற நிலையில், இ-பாஸ், உரிய அனுமதி உள்ளவர்களை மட்டும் வெளியூர் செல்ல போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply