சீனா இலங்கைக்கு கொரோணாவிற்கு எதிரான மருந்துகளை வழங்கியதா..?

இலங்கையும் சீனாவும் கொரோனாவை கட்டுப்படுத்தியதற்கு புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறையின் அர்ப்பணிப்பே காரணம்: இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும்;

இலங்கைக்கான கடமை நிறைவேள்று சீன தூதுவர் ஹூ வை அவர்கள் நேற்று ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து என்னைச் சந்தித்தார்.

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி எனது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து சீன ஜனாதிபதி ஷீ ஜிங் பிங் அவர்கள் அனுப்பி வைத்த மடலை தூதுவர் என்னிடம் வழங்கினார்.

கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு எதிராக இலங்கை முன்னெடுக்கும் விசேட வேலைத்திட்டங்கள் சீன ஜனாதிபதியின் பாராட்டை பெற்றுள்ளதென சீன தூதுக் குழுவினர் தெரிவித்தனர்.

இலங்கையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பங்களிப்பு செய்யும் வகையில் சீன அரசு மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பி வைத்திருந்தது. அவை சுகாதார அமைச்சிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன், நிவாரண உதவிகள் அடங்கிய பட்டியல் தூதுவரினால் என்னிடம் கையளிக்கப்பட்டது.

நெருக்கடிக்குள்ளான இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு உதவியமை தொடர்பாக ஜனாதிபதி ஷீ அவர்களுக்கும் சீன மக்கள் மற்றும் சீன நிறுவனத்திற்கும் எனது நன்றிகளை தெரிவித்தேன்.

சீனா மற்றும் இலங்கை ஆகிய எம் நாடுகள் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களை இனங்காணுவதற்காக ஒரே மாதிரியான வழிமுறைகளைப் பின்பற்றியுள்ளனவென சீனத் தூதுக்குழு குறிப்பிட்டது.

இந்த நெருக்கடியைச் சிறப்பாக்க் கட்டுப்படுத்துவதற்கு இரு நாடுகளினதும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் அர்ப்பணிப்பே காரணமாகும் என்றும் தூதுக்குழு குறிப்பிட்டது.

உலகளாவிய தொற்று நோயின்முன் இருநாடுகளும் பரஸ்பரம் பாரிய உதவிகளைச் செய்துகொண்டன.

இவ்வருடத்தில் பெப்ரவரி ஆரம்பத்தில் சீனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தபோது இலங்கை ஒரு தொகை கறுப்பு தேயிலையை சீனாவிற்கு அன்பளிப்பு செய்த காரணம், தேயிலையில் உள்ள நோய் நிவாரண குணாம்சத்தை கருத்திற்கொண்டேயாகும்.

அது மட்டுமன்றி சீனாவில் நோய்க்கிருமித் தொற்றுக்குள்ளானவர்களுக்காக ஆசி வேண்டி நாடு பூராகவும் பிரித் பாராயணமும் ஒலிக்கப்பட்டது.

கொழும்பு தேவி பாலிக்கா வித்தியாலயத்தின் மாணவர்கள் தமது சகோதரத்துவ உணர்வை வெளிப்படுத்தும் வகையில் வரைந்த பல ஓவியங்கள் சீன ஜனாதிபதியின் பாரியார் பென்ங் லியுவான் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கை அவரின் பாராட்டையும் பெற்றிருந்தது.

இந்நாட்களில் பீஜிங் நகரத்தின் நிலை பற்றி தெளிவுபடுத்திய தூதுக்குழு, சுமார் நூறு பேரளவில் தொற்றுக்குள்ளாகியிருந்தபோதும், தற்போது இந்நிலை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டது.

நோயின் ஆரம்பத்தை மிக விரைவாகக் கண்டு பிடிப்பதற்கு சீன அதிகாரிகள் சிறப்பாகச் செயற்பட்டிருந்தனர்.

நோய்த்தொற்றுப் பரவியது ஆட்களிலிருந்து அல்ல; ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டின் மீனின் மூலமேயாகும். இந்நிலை பற்றி உலக சுகாதார அமைப்பு அவதானத்துடன் இருப்பதாகவும் தூதுக்குழு குறிப்பிட்டது.

மேலும் பல துறைசார் விடயங்கள் தொடர்பாக நாம் கலந்துரையாடினோம். சீனாவின் தேயிலை ஏல விற்பனை, உலகின் சிறந்த தேயிலை என பிரசித்தி பெற்றுள்ள இலங்கை தேயிலையை சீனாவில் பிரபல்யப்படுத்துதல் தொடர்பாகவும் நாம் உரையாடினோம்.

இலங்கையில் சீன முதலீடு மற்றும் இருநாடுகளுக்குமிடையிலான நிதியுதவிகளை அதிகப்படுத்துவது பற்றியும் நேற்று நாம் ஆராய்ந்தோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply