கோத்தபாய ராஜபக்க்ஷவை கைது செய்யும் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது..! வெளிவந்த தகவல்கள்..!

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டிருந்ததாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கப்பட்டது.

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் தேடியறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் போதே முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான முன்னணியின் ஒரே நோக்கம், ராஜபக்ஷர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறைவைப்பதாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த திட்டம், முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா, அர்ஜுன ரணதுங்க மற்றும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர், பல சந்தர்ப்பங்களில் திட்டம் வகுத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அவன்காட் விவகாரம் தொடர்பிலேயே கோத்தாபய ராஜபக்ஷ கைதுசெய்யப்படவிருந்தாகவும் அத்துடன் அவருடைய பிரஜாவுரிமையும் இரத்து செய்யப்படவிருந்தது அதற்கான ஆவணங்கள் அன்றைய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததாகவும் முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.

Be the first to comment

Leave a Reply