அதிரவைக்கும் வீடியோக்கள்; காசியின் பிளே போய் வாழ்க்கை கசிந்தது..!

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்துக்கு வக்காலத்து வாங்கி அதை விடவும் பெரிய வேலைகளில் ஈடுபட்ட காதல் மன்னன்… இல்லை இல்லை.

காமக் குற்றவாளிதான் நாகர்கோவில் காசி. சமூக வலைத்தளம் மூலம் பெண்களை காதலிப்பது போல நடித்து உல்லாசம் அனுபவித்து, அதை ரகசியமாக படம் எடுத்து மிரட்டுவதும் பணம் பறிப்பதும்தான் காசிக்கு தொழில், பொழுதுபோக்கு எல்லாமே. 

அப்படி சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவரை மிரட்டிய போதுதான் அவர் கொடுத்த புகாரின் பேரில் மாட்டிக் கொண்டான் காசி. தற்போது ஐந்து பெண்கள் புகார் கொடுத்துள்ளதால் சிறைவாசத்தில் இருக்கும் காசியிடம் இருந்து 80க்கும்  மேற்பட்ட அந்தரங்க வீடியோக்களை சிபிசிஐடி போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அதன்படி, காசி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிச் சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகளுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. திருமணமான பெண்கள் பலருக்கும் காசி நீண்டகாலமாக கால் பாயாக இருந்து வந்த அதிச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
காசியாக தேடிப் போய் தொடர்பு கொண்ட பெண்களை விட அவனை தொடர்பு கொண்டு தானாக வலையில் விழுந்த பெண்களே அதிகம் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலியல் தொடர்பு வைத்த பெண்கள் அவனுக்காக அதிக அளவில் பணம் செலவு செய்ததால், அவன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அம்பலம் ஆகியிருக்கிறது.தற்போது அடுத்த கட்டமாக, காசி எந்த ஊர்களில் எல்லாம் பெண்களோடு தொடர்பு வைத்திருந்தான் என்பது பற்றியும் காசிக்கு உதவிய பிரமுகர்கள் குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

வரும் 19 ஆம் தேதியோடு காசியின் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில்,  அதற்குள் காசியிடம் இருந்து அனைத்து உண்மைகளையும் கறக்க சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையின் இறுதியில் இதைவிடவும் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்:- தந்தி டீவி

Be the first to comment

Leave a Reply