வடமராட்சி கிழக்கில் கடும் பதற்றம்; பொலிஸ் இராணுவம் உடனடியாக குவிப்பு..!

யாழ்.வடமராட்சி கிழக்கு- மணற்காடு பகுதியில் இன்று காலை தனியார் ஒருவர் ஊடாக மணல் அகழ்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை எதிர்த்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் கூடியதால் பொலிஸார், இராணுவம் குவிக்கப்பட்டு பதற்றமான நிலை ஏற்பட்டது.

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பகுதியில் மணல் அகழ்வதற்கான உரித்து தனியாார் வர்த்தகர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் குறித்த வர்த்தகர் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல் வெளியில் இருந்து ஆட்களை கொண்டுவந்து மணல் அகழ்வதற்கு முயற்சித்துள்ளார்.

ஏற்கனவே பிரதேச செயலகம் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் பிரதேச மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனினும் அது மீறப்பட்ட நிலையில் மணல் அகழ்வை எதிர்த்து நுாற்றுக்கணக்கான மக்கள் கூடினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸாாரும், இராணுவத்தினரும் அழைக்கப்பட்டு சமாதானம் பேசப்பட்டதுடன், பாதுகாப்பும் வழங்கப்பட்டது.

இல்லையேல் மீண்டும் போராட்டம் நடாத்துவோம் என மக்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையின் வடக்கில் குறிப்பாக வடமராட்சி கிழக்கில் மட்டும் மக்கள்

பிழையான பாதையில் செல்லுதல்

மணல் கடத்தல்

போதைப்பொருள் கடத்தல்

முற்கோபக்காரராக சண்டித்தனம் அடாவடி போன்ற செயற்பாடுகளுக்கு முனைப்பு காட்டுதல் என்பன குறிப்பாக வடமராட்சி கிழக்கு மக்களிடையே மட்டும் காணப்படுவதாக அப்பகுதி மக்களே கவலை வெளியிட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply