கூட்டமைப்பின் முயற்சியால் ஒரு அரசியல் கைதியேனும் விடுவிக்கப்பட்டவில்லை..!

தமிழ் அரசியல் கைதிகள் எவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய முயற்சிகளின் ஊடாக விடுவிக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (16) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்த்து கருத்து தெரிவிக்கையில்,

‘ஓரிரு நாட்களுக்கு முன்பாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரு சில விடயங்களை கூறி இருக்கின்றார்கள்.

முக்கியமாக மீன்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிக அதிகபட்சமாக ஆசனங்களுடன் நாடாளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றும் ஒரு மாற்று அணியோ மாற்று தலைமையோ தேவையற்ற விடயங்கள் என்ற என கூறியுள்னர்.

தாங்கள் மீண்டும் போனால் இந்த நாட்டில் ஒரு இராணுவ ஆட்சி வர இருக்கிறது ஆகவே எதிர் கட்சிகள் பிளவடைந்து போயுள்ளது அதாவது ஐக்கிய தேசிய கட்சி பிளவடைந்து போயுள்ளது.

ஆகவே நாள்கள் ஒரு பலமான சக்தியாக வருவதன் மூலம் சில சமயம் மீண்டும் ஒருமுறை நாங்கள் எதிர் கட்சித் தலைமையை பெற்றுக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

அவ்வாறு பெற்றுக்கொள்வதன் ஊடாக பல விடயங்களை சாதிக்க முடியும் என்ற தோரணையில் சில கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். அது ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றது.

ஆகவே அதனடிப்படையில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பாக சில கருத்துகளை நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முதலாவதாக கடந்த நான்கரை வருடங்களாக அல்லது யுத்தத்திற்கு பிற்பாடு தமிழ் மக்கள் ஒரு ஐக்கியத்தின்மேல் நம்பிக்கை கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பல விடயங்களை சாதியம் என்பது நம்பிக்கையாக கொண்டு அவர்களை நாடாளுமன்றம் அனுப்பி இருந்தார்கள்.

ஆனால் கடந்த நான்கரை வருட காலத்தில் இவர்கள் கூறியது போன்று அல்லது இவர்கள் மக்களுக்கு கொடுத்த ஆணை அல்லது நம்பிக்கை அதன் அடிப்படையில் அவர்கள் ஏதாவது விடையங்களை சாதித்திருக்கிறார்களா என்று ஒரு கேள்வி நிச்சயமாக இருக்கிறது.

காணிகள் விடுவிப்பாக இருக்கலாம் அரசியல் கைதிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமலாக்கப்பட்டோர் விவகாரங்களாக இருக்கலாம்.

ஒரு புதிய அரசியல் சாசனத்தை கொண்டு வருவதாக இருக்கலாம். இவை எதிலும் அவர்கள் வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மையான விளக்கம்.

சுமந்திரன் கூறுகின்ற போது ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றது, ஒரு பகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள், அரசியல் சாசனம் நாங்கள் ஒரு மிக நீண்ட தூரம் போயிருக்கின்றோம்.

ஆனால் துரதிஸ்ட வசமாக அது சாத்தியப்படவில்லை போன்ற சில விடயங்களை அவர் தொடர்ச்சியாகச் சொல்லிவருகின்றார்.

Be the first to comment

Leave a Reply