தௌஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்புக்கள் 06 நாட்டில் உள்ளன: பகீர் தகவல்கள் அம்பலம்..!

தௌஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்புக்கள் 06 நாட்டில் உள்ளன

2013 – 2014 ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் நிலவிய இஸ்லாமிய பிரிவினைவாத செயற்பாடுகள் குறித்து அப்போதைய அரசாங்கத்திற்கு தான் முதன்முதலில் அறியப்படுத்திய போதிலும் 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் இஸ்லாம் தீவிரவாதம் குறித்து எந்த கரிசனையும் கொள்ளவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன்தினம் (15) இரண்டாவது நாளாக சாட்சி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஞானசர தேரர் நேற்று முன்தினம் இரவு பதினொரு மணி வரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தார்.

அரசாங்கத்தின் கீழ்மட்ட இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஹதீஸ் நூல்கள் தொடர்பான பாட விதானங்கள் நல்லது. இருப்பினும், க.பொ.த. உயர்தர ஹதீஸ் பாட புத்தகங்களில் வேற்று மதத்தினரை கொல்ல வேண்டும் என கற்பிக்கப்படுவதாக அவர் கூறினார்.

நாட்டில் ஆறு தௌஹீத் ஜமாத் தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும் மேலும் பல பிரிவினைவாத குழுக்கள் தொடர்பிலும் விளக்கினார்.

வாமி அல்லது உலக முஸ்லீம் இளைஞர் அமைப்பின் நடவடிக்கைகள் இலங்கையில் தெளிவாகக் காணப்படுவதாக கூறிய அவர், அவற்றின் பிரதான அலுவலகங்கள் தெமட்டகொட மற்றும் மஹாவில பகுதியில் உள்ளதாக தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் மகனின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹீரா என்ற அறக்கட்டளை ஜமாஅத்தே இஸ்லாமிய சித்தாந்தத்தின் தீவிரவாத சித்தாந்தத்திற்கு ஏற்பவும் பிரிவினைவாத கோட்பாடுகளை உள்ளடக்கியது எனவும் ஞானசர தேரர் மேலும் கூறினார்.

இதன் பேது ஆணைக்குழு அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீன் தௌகீத் கோட்பாடுகளின் பின்னாள் உள்ளதாக ஞானசர தேரர் முன்னர் வெளியிட்ட கருத்து தொடர்பில் வினவினர்.

இதற்கு பதிலளித்த அவர், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் வாக்களிக்க தனது மனைவியை முழுமையாக முகத்தை மூடி அழைத்து வந்தாகவும் அவரது கண்கள் மட்டும் தெரிய கூடிய வகையிலும் முற்றிலும் மூடப்பட்டிருந்தாக தேரர் கூறினார்.

நாட்டில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளின் பரவல் குறித்து அரசாங்கத்திற்கு எப்போது, எப்படி அறிவிக்கப்பட்டது என ஆணைக்குழு தேரரிடம் வினவியது.

2014 ஆம் ஆண்டில் அப்போதைய அரசாங்கத்தால் நடத்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் கூட்டத்திற்கு தாம் அழைக்கப்பட்டதாகவும், அப்போது தான் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களை நாடு கடத்துவது, மத்ரசா பாடசாலைகளில் போதிக்கப்படும் இனவாத போதனைகள் உள்ளிட்ட 25 பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், பிரிவினைவாதம் குறித்து தான் முன் வைத்த கருத்துக்கள் தொடர்பில் தேடிப்பார்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் தங்களின் இருப்பிற்காக மத ரீதியான பிரச்சினைகளை உருவாக்கியதாகவும், தெல்தெனிய, திகன போன்ற இடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் அவ்வாறான நோக்கத்தின் விளைவாகும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசர தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply