88000 பேரை இஸ்லாத்திற்கு முன்னாள் அமைச்சர் மாற்றியுள்ளார்; ஞானசாரர் அதிர்ச்சி சாட்சியம்..!

Gnanasara thero

கடந்த 5 வருடங்களில் 88000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலபொட அத்தே ஞானசார தேரர் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த 5 வருடங்களில் மாத்திரம் நாடு முழுவதும் பௌத்த இந்து மற்றும் கிருஸ்தவர்கள் 88000 பேர் இஸ்லாமியர்களாக மாதம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறி உள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நிதி உதவிகளைப் பெற்று இலங்கையில் அடிப்படைவாதத்தை போதிப்பதில் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் சாட்சியமளித்துள்ளார்.

அந்த அமைச்சர் யார் என்று ஆணைக்குழு உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அந்தப் பெயரைக் கூறினால் தான் கைது செய்யப்படக் கூடும் என்று ஞானசார தேரர் கூறினார்.

எவ்வாறாயினும் அதனை எழுத்து மூலம் வழங்குவதாக கூறிய தேரர், அந்த வில்பத்து காடழிப்பு சம்பவத்தில் நேரடித் தொடர்பு உள்ளவரே அந்த அமைச்சர் என்று குறிப்பிட்டார்.

Be the first to comment

Leave a Reply