அதிரடியாக குறைக்கப்படும் வங்ஙிகளின் கடன் வட்டி வீதங்கள்..! 10% இலும் குறைவாக வ.வட்டி..!

Loan intrest

இது தொடர்பாக ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்..

கடன் வட்டி வீதத்தை குறைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரச வங்கிகள் நேரடிப் பங்களிப்பு ஆற்ற வேண்டும்:

அரசாங்கமொன்றின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையை வகுக்க வேண்டியது அரச வங்கிகளின் பொறுப்பாகும்.

அதனை விளங்கிக்கொண்டு பொருளாதாரத்தைச் செயற்திறமாகப் பேணுவதற்கான மூலோபாயத்தை முன்கொண்டு செல்வது வங்கிகளின் முக்கிய பொறுப்பாகுமென்றும் நான் குறிப்பிட்டேன்.

இலங்கை வங்கியின் செயலாற்றுகை மீளாய்வு தொடர்பான கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலின்போதே நான் இதனைத் தெரிவித்தேன்.

கடனுக்காக 10 வீதத்திற்கு மேற்பட்ட வட்டியை அறவிடுவதன் மூலம் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாது எனக் குறிப்பிட்ட நான், வட்டி வீதத்தை 10ற்கும் குறைந்த பெறுமாணத்திற்கு கொண்டுவந்து அபிவிருத்திக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினேன்.

எனது உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அல்லது எனக்கு உதவியவர்களுக்கு கடன் வழங்குமாறு ஒருபோதும் நான் வங்கிகளுக்கு கூறியதில்லை என்பதனைக் குறிப்பிட்ட நான், விவசாயிகள் முதல் சிறிய, நடுத்தர தொழில் முயற்சியாளர்களும் முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் நிதி உதவிகளை வழங்குவதற்கு அரச வங்கிகள் முன்னணியில் இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தேன்.

இன்றுள்ள நிலைமைக்கு உலகின் எந்தவொரு நாடும் இதுவரையில் முகங்கொடுக்கவில்லை. இதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது பற்றி பழைய முறைமைகளிலிருந்து விலகி சிந்திக்க வேண்டும்.

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது பாரம்பரிய முறைமைகளின் ஊடாக மட்டும் செய்ய முடியாதென்றும் நான் சுட்டிக்காட்டினேன்.

மக்கள் எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி முழு நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நான் பின்நிற்கப் போவதில்லை என்றும் நான் தெரிவித்தேன். அதிகாரமானது ஒருபோதும் அரசியலுக்காக அன்றி, அது நாட்டுக்கானதாகும் என்றும் நான் குறிப்பிட்டதுடன், எனது அதிகாரங்களை யாரும் துஸ்பிரயோகம் செய்தால், அதற்குப் பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்கு நான் பின்நிற்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டேன்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் 07% வீதத்திற்கும் 08% வீதத்திற்கும் இடையிலிருந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 2019ஆம் ஆண்டாகும்போது 02% வீதத்தை விடவும் வீழ்ச்சியடைந்தது.

கொவிட் 19 நோய் தொற்றுடன் வீழ்ச்சியடைந்த உலக பொருளாதார சூழலினால், எமது நாட்டுப் பொருளாதாரமும் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் விளங்கிக்கொண்டு நாட்டின் பொருளாதாரப் புத்தெழுச்சிக்காக அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுவது அரச வங்கிகளின் பொறுப்பாகுமென்றும் நான் தெரிவித்தேன்.

எனது செயலாளர் பீ. பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல, இலங்கை வங்கியின் தலைவர் சட்டத்தரணி காஞ்சன ரத்வத்தே, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

Be the first to comment

Leave a Reply