சுவிஸ் மக்களுக்கு கொரோணாவின் பின் நெஞ்சு குளிரும் செய்தி..!

Swiss open

சுவிட்சர்லாந்து நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அனைத்து எல்லைகளும் இன்று யூன் 15 திறக்கப்படுகின்றதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் நடுப்பகுதியில் பூட்டப்பட்ட பிறகு, சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எல்லைகளை மூடி அவசர தேவைகளுக்காக மட்டுமே மக்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

இந்த நிலையில் யூன் மாத ஆரம்பத்தில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்த போதும் இன்று யூன் 15 முதல் மீண்டும் வழமைபோல் மக்கள் சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளவும், பொருட்களை கொள்வனவு செய்யவும் அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை யேர்மன் நாட்டு கடைகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்தவாறே உட்செல்ல வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சுங்க வரி படிவங்களை எல்லைகளிலுள்ள சுங்க அலுவலகத்திற்கு வெளியே நிரப்ப வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எல்லைகள் மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து எல்லைப் பகுதியில் உள்ள Aldi, Lidl போன்ற பல்பொருள் அங்காடிகள் சிறப்பு விலைக்கழிவுகளை அறிவித்துள்ளன.

இதேவேளை இதன் காரணமாக சுவிஸ் விற்பனை நிறுவனங்களுக்கு மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதோடு EU – ஐரோப்பிய ஒன்றியம், EFTA – ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒன்றிய நாடு அல்லது பிரித்தானியா நாட்டினரும் மீண்டும் சுவிட்சர்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் எனினும் பிரித்தானியா நாட்டுக்கு செல்வோர் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடித்தல் நடைமுறையில் இருக்கும் எனவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply