தலைவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய 26 ஆவா உறுப்பினர்களை கொத்தாக அள்ளியது பொலிஸ்..!

Ava gang arrested

ஆவா குழு தலைவரின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று (15) மாலை, ஆவா குழு தலைவர் என கூறப்படும் சன்னாவின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று கேக் வெட்டிக் கொண்டாடிய 26 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply