சென்னையில் ஜீன் 19 முதல் கடுமையான முழுமையான ஊரடங்கு..! வைரஸ் பரவல் தீவிரம்..!

சென்னையில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஜூன் 19ஆம் தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டம் , செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 21, ஜூன் 28 ஆகிய இரண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் கடுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். மருந்துக் கடைகள், மருத்துவமனைகள், பால் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளும் திறக்கப்பட மாட்டாது. மருத்துவ வாகனங்களைத் தவிர வேறு எந்த வாகனங்களும் இயங்கக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply