திறக்கப்பட்டுள்ளது கட்டுநாயக்காவின் வெளியேறும் பகுதி..!

கட்டுநாயக்கவிலுள்ள சர்வதேச விமானநிலையத்தின் புறப்படல் கூடம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப்போக்குவரத்து சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி விமானப் பயணி ஒருவருடன் 3 பேர் வழியனுப்பல் கூடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

எனினும் விமானப் பயணிகளுடன் அவர்களுடன் வருவோரும் முகக்கவசம் அணிவதுடன் மற்றும் சமூக இடைவெளியை பேணுவது தொடர்பாக சுகாதார அமைச்சுவிடுத்துள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply