
கடந்த சில தினங்களில் யாழ்ப்பாணம் நாக விகாரையின் புத்தர் சிலை மீது தாக்குதல்நடத்தப்பட்டமை தொடர்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 12 ஆயிரம் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற 400 பேர் தொடர்பில் கண்காணிக்க அரச அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் சாம்பலில் இருந்து எழுந்து வருவார்கள் என லண்டன் இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தி தொடர்பாக அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.அத்தோடு கடந்த சில மாதங்களாக தமிழீழ இணைய போராளிகளின் சைபர் தாக்குதல் தொடர்பிலும் அரசு கவனம் செலுத்தியுள்ளது.
வடமராச்சி பிரதேசத்தில் கிளைமோர் குண்டு வெடிப்பில் இரண்டு பொலிஸார் காயமடைந்ததை அடுத்து புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக அதிகமான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be the first to comment