வவுனியா புகையிரத நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது..!

வவுனியா புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்தில் இருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு வருகை தந்த இருவர் நிலைய அதிபருடன் தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் புகையிரத நிலைய அதிபருக்கு அச்சுறுத்தலும் விடுத்து அங்கிருந்து சென்றதாக புகையிரத நிலைய உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக புகையிரத நிலைய தலைமையகத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டதுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படும் வரை புகையிரத சேவைகளை நிறுத்துவோம் எனவும் தெரிவித்ததை அடுத்து தகராறில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply