தவறான பாதையில் செல்லும் தனிமைப்படுத்தல் சட்டம்..! பலர் விசனம்..!

நாட்டின் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டமூலத்தையும் அதன் சட்டத்திட்டங்களையும் பயன்படுத்தி வருகிறது என தேசிய மக்கள் சபையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் செய்தியாளர்களை நேற்றைய தினம் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட, நாட்டில் நடந்த ஊழல், மோசடிகளுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கே அந்த கட்சியில் உயர் பதவிகளை வழங்கியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலதிக தினக் கூலியாக 50 ரூபாய் வழங்கப்படுவதை எதிர்த்த முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு ரணில் விக்ரமசிங்க, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.

இதேவேளை நாட்டின் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்குவதற்காகவே தற்போதைய அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டமூலத்தையும் அதன் சட்டத்திட்டங்களையும் பயன்படுத்தி வருகிறது என்றும் கடுமையான குற்றச்சாட்டினையும் முன்வைத்திருக்கிறார்

Be the first to comment

Leave a Reply