சீனாவில் மீண்டும் கொரோனா? : ஊரடங்கல் செயற்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன..!

சீனாவின் தலைநகர் பீஜிங்கின் ஒரு பகுதி கடுமையான முடக்க நடவடிக்கைக்கு உட்பாடுத்தப்பட்டுள்ளது.

கடந்த கடந்த 50 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அந்தப்பகுதி இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பீஜிங்கின் Xinfadi சந்தைப் பகுதியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 517 பேரில் 45 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளங் காணப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி எதுவும் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக Xinfadi சந்தைப் பகுதியை அண்மித்துள்ள 11 இடங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் பணியாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply