மதியாதார் வாசல் மிதியாதே என்பதை அறியாது கிழக்கு சென்ற சுமந்திரன்..!

கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் ஒ்னறினை மேற்கொண்டு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா சென்றிருநு்தார். அந்த சூழலில் அங்கு கட்சித் தொண்டர்களை சந்திக்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது அழையா விருந்தாளியாக சுமந்திரன் மட்டக்களப்பு அம்பாறைக்கு சென்றது அங்கு இருக்கும் ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாவை அவர்கள் அழைத்துச் செல்லாத சூழலில் ஆதரவுத் தளம் யாழில் ஆட்டங்கண்டுள்ள நிலையில் தன்னை ஒரு பலசாலி என காட்டுவதற்கு கிழக்கு மாகாணத்திற்கு சுமந்திரன் சென்றமை மிகவும் ஒரு பிற்போக்குத் தனமானது என கட்சியின் தொண்டர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் நேற்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு இல்லாமல் சென்றுள்ளமை சுமந்திரன் மீது அதிக அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment

Leave a Reply