கொரோனா சிகிச்சைக்கு 8.5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்திய முதியவர்..!

கொரோனா சிகிச்சைக்கு 8.5 கோடி ரூபாய் கட்டணம் செலுத்திய முதியவர்!

அமெரிக்காவின் சியாட்டல் நகரில் மைக்கேல் ஃப்ளோர் என்ற நபர் 62 நாட்கள் கொரோனா வைரஸுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதில் 29 நாட்கள் அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்ட அவருக்கு, 181 பக்கங்கள் கொண்ட கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது.

அதில் 3,000 மேற்பட்ட உபகரணங்களுக்கான கட்டணமும் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 1.12 மில்லியன் டாலர் ( ரூ. 8,52,61,811) அவருக்கு கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர் கட்டணம் ஒரு நாளைக்கு 82 ஆயிரம் டாலர் என்ற வகையில் 29 நாட்களுக்குப் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் 42 நாட்கள் தனிப்பட்ட அறையில் இருந்ததற்கான கட்டணம் ஒரு நாளைக்கு 9,736 டாலர் என்ற விதம் 4,09,000 டாலர் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றை தவிர வேறு எந்த உடல்நலக் கோளாறும் இல்லை என்பதால், அவரது சிகிச்சைக்கான கட்டணத்தை காப்பீடு நிறுவனமே வழங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply