கிளிநொச்சியில் கிளைமோர் போன்ற பாணியில் வெடிபொருள்; படையினர் அதிர்ச்சியில்..!

பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் கண்டாவளை பகுதியில் உள்ள இராணுவ முகாம் அருகில் காணப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொருள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

பச்சை நிற பையில் வைக்கப்பட்ட நிலையில் குறித்த மர்மமான வெடிபொருள் காணப்பட்டது. இதனை அறிந்து அந்த இடத்திற்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன்,

குறித்த மர்ம வெடிபொருள் தொடர்பாக ஆராய்ந்த பொலிஸார் அது உறுதியாக வெடிபொருள் என்பதை உறுதிசெய்ததையடுத்து பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டது.

எனினும், குறித்த பகுகியில் எவ்வாறு குறித்த வெடிபொருள் வைக்கப்பட்டிருக்கும் என்ற பல்கோண விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply