
க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், குறிப்பிடப்பட்ட திகதிக்கு ஒரு வாரம் முன்னதாக பாடசாலைகளை திறப்பதற்கு கல்வியமைச்சு அவதானம் செலுத்தி வருகிறது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
உயர்தர பரீட்சைக்கு மாணவர்கள் ஆயத்தமாவதற்காக வழங்கப்பட்டுள்ள காலம் போதாமை என்ற கருத்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து வெளிவந்ததன் காரணமாக குறித்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் 29ஆம் திகதி நான்கு கட்டங்களின் கீட் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், 13, 12 மற்றும் 5ஆம் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 6ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில் உயர்தர பரீட்சைகள் செப்டெம்பர் 7ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயர்தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 6ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்க வேண்டுமாயின் அதற்கு முன்னதாக அனைத்து வகுப்புக்களுக்கும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இது தொடர்பிலான இறுதித்தீர்மானம் மேற்கொள்வதற்காக கல்வியமைச்சர், அதன் செயலாளர் மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
Be the first to comment