இணுவிலில் இருந்து இந்தியா; கொரோணா இல்லை; வடமாகாண சுகாதாரத்துறை ஏன் அவசரம்..!

யாழ்ப்பாணம்-இணுவில் பகுதியில் நீண்டகாலம் தங்கியிருந்து அண்மையில் தமிழகம் திரும்பிய புடவை வியாபரி ஒருவருக்கு கொரோன தொற்று இருப்பதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படு்தியிருந்த நிலையில் குறித்த வியாபாரிக்கு கொரோனா இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கணேஸ்பாபு என்ற அந்த வியாபாரி தற்போது தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளமையை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானதாகக் கூறப்பட்ட கணேஸ்பாபு என்ற வியாபாரி மற்றும் அவரது நண்பர்களுடன் நேற்றிரவு தினக்குரல் செய்தியாளர் தொடர்புகொண்டு பேசிய நிலையில் தொற்றுநோய் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது

தொற்றுநோய் இருப்பதாக கூறப்பட்ட யாழில் இருந்து திரும்பிய கணேஸ்பாபு என்ற வியாபாரிக்கு கடந்த 9 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்று பரிசோதனையின் முடிவு அவருக்கு தொற்று இல்லை என்பதை உறுதிசெய்துள்ளது.

எனினும் அவருக்கு 3 ஆம் திகதி நடத்தப்படட பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக வெளியான முடிவுகளே சர்ச்கைகளுக்குக் காரணமாக அமைந்தன.

ஆனால் 3 ஆம் திகதி தொற்று நோயாளர் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 9 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதிப்படுத்தி தமிழக சுகாதாரத்துறை சான்றிதழ் வழங்கியுள்ளது.

எனினும் 6 நாட்களுக்க தொற்று எனவும் தொற்று இல்லை எனவும் மாறியமை எவ்வாறு என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்துள்ளது

இது தொடர்பாக வடமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோது இந்திய துணைத்தூதரகத்தின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளதாக கூறினார்.

இணுவிலில் தங்கியுளுள்ள வியாபாரிக்கு கொரோனா இல்லை எனத் தகவல் வெளியான நிலையில் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் குறித்து கேட்ட போது இந்திய வியாபாரிக்கு கொரேனா இல்லை என்ற தகவலை உத்தியோகபூர்வமாக தகவல் வரும்வரை அவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடரும் எனக்குறிப்பிட்டார்.

இதைனயடுத்து யாழ். இந்தியத் துணைத்தூதுவருட நேற்று தொடர்வுகொண்டு வினவிய போது;

அவர் யாழில் இருந்து திரும்பிய நபருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கை தமக்கு சம்பந்தப்பட்டவரின் நண்பர்களால் அனுப்பிவைக்கப்பட்டதாக கூறினார். எனினும் இந்திய மத்திய சுகாதாரத்துறையுடன் தொடர்புகொண்டு உடனடியக தகவல்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக துணைத்தூதுவர் தெரிவித்தார்.

எனினும் யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய நபருக்க கொரோனா இல்லை என்பது யாழ்ப்பாண மக்களுக்கு அச்சமின்ற இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சியே என அவர் தெரிவித்தார்.

இதேவேளை வடமாகாண சுகாதாரத்துறை மக்களை அச்சமடையச்செய்யும் செயல்களை செய்து வருவதாக இணுவில் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான விடயங்களை முந்தியடித்துக்கொண்டு ஊடகங்களுக்கு வெளியிடுவது தடை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply