லீசிங் கம்பனிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை; ஜனாதிபதி இன்று அதிரடி..!

மாதாந்த குத்தகை கடன் செலுத்தாத காரணத்தினால் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்க உத்தரவை மீறும் செயலாகும்:

குத்தகை (leasing) முறையில் வாகனங்களை கொள்வனவு செய்து தவணைக் கடன்களை (installment loan payments) செலுத்தத் தவறுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு குத்தகை வழங்கிய நிறுவனங்கள் (leasing companies) பின்பற்றும் முறைமை சட்ட விரோதமானது.

அதனால் – ஒருபோதும் அதற்கு இடமளிக்க வேண்டாம் என்று நான் காவற்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

குத்தகை நிறுவனங்கள் (leasing companies) அவ்வாறு வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கு முன்னர் காவற்துறையினருக்குத் தெரியப்படுத்துவதில்லை.

காவற்துறையினரிடம் அவர்கள் முறையிடுவது – வாகனத்தைப் பறிமுதல் செய்ததன் பின்னரே ஆகும்.

பலவந்தமாக மேற்கொள்ளப்படும் இத்தகைய பறிமுதல்கள் சிலபோது பாரதூரமான வன்முறைக்கும் காரணமாகின்றதன.

எனவே – அவ்வாறு பறிமுதல் செய்ததன் பின்னர் நிறுவனங்களிடமிருந்து (leasing companies) கிடைக்கும் முறைப்பாடுகளை மறு அறிவித்தல் வரை ஏற்க வேண்டாம் என நான் பதில் காவற்துறை மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்னவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

கொவிட் 19 பரவலுடன் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் தரப்பினருக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்களின் கீழ் முச்சக்கர வண்டி உரிமையாளர்களினால் செலுத்தப்படும் தவணைக் குத்தகைக் கடனை (installment loan payments) அறவிடுவது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

எனது செயலாளரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட 16/2020 ஆம் இலக்க சுற்றுநிருபத்தின் இரண்டாவது பிரிவில் அது தொடர்பாகத் தெளிவாக்க் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் தவணை கடன் செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும் என நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.

எனவே தவணைக் கடன் செலுத்தாததன் காரணமாக வாகனங்களை பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் நான் காவற்துறையினருக்குத் தெரிவித்துள்ளேன்.

Be the first to comment

Leave a Reply