ஊரடங்கு குறித்து சற்று முன் வெளியான தகவல்..! புதிய மாற்றங்கள்..!

நாடளாவிய ரீதியில் நாளைமுதல் நள்ளிரவு 12 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊ ரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று முற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்குமெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச மற்றும் தனியார் துறைசார்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகளின் போதும், பொதுமக்களின் அன்றாட செயற்பாடுகளின் போதும் சுகாதார நியமங்களை முறையாக பின்பற்றுமாறும் இதன்போது அறிவுறுத்தல் வி டுக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply