
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியில் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி எச்.வி.எல்.விஜயரத்ன தெரிவித்தார்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் மட்டக்களப்பு இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியோருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படை படையினரின் உதவியுடன் ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியில் ஆயிரத்து எழுநூற்றி எழுபத்தைந்து (1775) கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுணதீவு விசேட அதிரடிப்படை படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயிரத்து எழுநூற்றி எழுபத்தைந்து (1775) கிராம் கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.
Be the first to comment