கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்!! மரபணு பரிசோதனைக்கு உத்தரவு; வாழைச்சேனையில் அதிர்ச்சி..!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (11) இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தாயான வெள்ளக்குட்டி றகுமத்தும்மா (வயது-60) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வைத்தியர் வீதியில் தனிமையில் வசித்து வந்த குறித்த பெண் நேற்று இரவு பத்து மணியளவில் அதே வீதியில் வசித்துவரும் அவரது மகளின் வீட்டில் இருந்து தனது வீடிட்டிற்கு வந்ததகவும் இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்த பொது கதவு திறந்த நிலையில் வீட்டின் படுக்கை அறையில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு இருப்பதைக்கண்ட உறவினர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply