தமிழருக்கு மாற்று அணி தேவையில்லை; எங்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்கள்..! மன்றாடி வாக்கு கேட்கும் சுமந்திரன்..!

நாடு இராணுவ மயமாக்கல் என்ற ஆபத்தான நிலைக்குச் சென்றுகொண்டுள்ள நிலையில், தமிழர் தரப்பில் மாற்று அணி என்ற கோஷத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலமான அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்” என்று அக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளை நிறைவாக பூர்த்தி செய்யக் கூடிய ஓர் அரசியல் தீர்வு ஏற்படுத்துவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலையாய கடமை ஆகும். அத்துடன், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் உதவியோடு வடக்கு, கிழக்குக்கு விசேடமாக பொருளாதரத் திட்டம் ஒன்று தீட்டப்பட்டு நடமுறைப்படுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று (11) காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply