
வைத்தியசாலை ஊழியர் போல் மோட்டார் சைக்கிளில் மருத்துவ குறியீடு பொறித்து 50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திய பெண் யாழ்.அரியாலை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
50 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் பயணிப்பது தொடர்பாக யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
நடாத்தப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கியமான நபர் சிறையில் உள்ளதாகவும், அவரே இவற்றை வழிநடத்துவதாகவும் கூறப்படுகின்றது.
Be the first to comment