மங்களவுக்கு ஐ.தே.கவில் தேசியப் பட்டியல்..! அரசியலில் தடாலடிகள் சகஜம்..!

பொதுத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியுள்ள முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி தேசியப்பட்டியல் எம்.பி. பதவியை வழங்கவேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் களுத்துறை மாவட்டத்தில் களமிறங்குவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர, விருப்பு இலக்கம் வெளிவந்த கையோடு, போட்டியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே அவரை ஐக்கிய தேசியக்கட்சி இணைத்துக்கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply