பந்தில் எச்சிலா..! எதிரணிக்கு 5 ஓட்டங்கள்..! அலறும் கிரிக்கட் துறை..!

பந்தில் எச்சில் தேய்த்தால், எதிரணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும்.. கதறும் பந்துவீச்சாளர்கள்!!

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் போட்டிகள் உட்பட எந்தவொரு போட்டிகளும் நடத்தப்படவில்லை, இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் நடைபெறும் போட்டிகளான உலகக் கோப்பை கிரிக்கெட், ஐபிஎல் போட்டி என எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் போட்டிகள் அடுத்து நடத்தப்பெறும்போது, கொரோனா பரவாமல் தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கிரிக்கெட் போட்டிகளில் பல புதிய நடைமுறைகள் ஐசிசி தரப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

அதாவது கிரிக்கெட்டில் உள்ள பழைய விதிமுறைகள் சில நீக்கப்பட்டதுடன், புதிதாகவும் சில விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் பந்தில் எச்சில் தடவக்கூடாது என்ற ஒரு விதிமுறை சேர்க்கப்பட்டுள்ளது. வீரர்கள் பலரும் இந்த விதியைக் கடைபிடிப்பது கடினம் என்று புலம்பிய நிலையில், இதில் ஏதாவது சலுகை கிடைக்கும் என நினைத்த நிலையில், மறந்து எச்சிலால் பந்தை தேய்த்தால் ஒரு முறை எச்சரிக்கை விடப்பட்டு, அடுத்த முறை தேய்க்கும்போது எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

எதிரணிக்கு கூடுதலாக 5 ரன்களா? என பந்துவீச்சாளர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்

Be the first to comment

Leave a Reply