மரண தண்டனை விதிக்கப்பட்ட வெலே சுதா, பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளார் ..?

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் வெலே சுதா, பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காவல்துறை பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பாரியளவிலான போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் நபராக வெலே சுதா காணப்படுகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழுவில் பிரசன்னமாகி சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.வெள்ளவத்தை முதல் கதிர்காமம் வரையில் வெலே சுதா போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply