
தாய்லாந்தில் 14 வயது சிறுமி கர்ப்பமான நிலையில் கடவுள் தான் என்னை கர்ப்பமாக்கினார் என அவர் கூறியது சிறுமியின் தாயார் மற்றும் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
தாய்லாந்தின் Buriram மாகாணத்தை சேர்ந்த 14 வயது சிறுமி திடீரென இரு தினங்களுக்கு முன்னர் வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
சிறுமியிடம் கேட்டதற்கு, கடவுள் தான் தன்னை கர்ப்பமாக்கினார் என கூற அவரின் தாய் மற்றும் மருத்துவர்கள் அதிர்ந்து போனார்கள்.
இதனிடையில் தற்போது அந்த சிறுமி காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், சிறுமியின் கர்ப்பத்துக்கு அவரின் வளர்ப்பு தந்தை தான் காரணம், ஏற்கனவே சிறுமியின் சகோதரியான 15 வயது பெண்ணையும் அவர் வன்கொடுமை செய்துள்ளார் என கூறினார்.
இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த சிறுமியின் தாய், எனக்கு இந்த விடயங்கள் குறித்து எதுவும் தெரியாது, தெரிந்திருந்தால் நானே என் கணவர் மீது பொலிசில் புகார் கொடுத்திருப்பேன் என கூறினார்.
இதையடுத்து பொலிசார் வளர்ப்பு தந்தை மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையின் போது அவர் பேசியது பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அவர் கூறுகையில், நான் சிறுமியுடன் உறவு கொண்டது உண்மை தான், ஆனால் அந்த சமயத்தில் கடவுள் என் உடலுக்குள் வந்தார், அதனால் கடவுள் தான் இப்படி செய்ய வைத்தார் என கூறினார்.
பொலிசார் கூறுகையில், சிறுமியின் வாழ்க்கை இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டிருப்பதால் இந்த வழக்கை கவனமாக கையாள்கிறோம் என கூறியுள்ளார்.
Be the first to comment