கலகக்காரர்களை அடக்கிய பொலிஸுக்கு கொரோணா; கதி கலங்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்..!

உலகளாவிய ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஜோர்ஜ் பிலாய்ட்டின் இனவெறி கொலை தொடர்பில் வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரியொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றன.

தற்போது வரையில் அங்கு கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை கடந்துள்ள நிலையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்துக்கு அதிகமானோர் கொவிட் 19 தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜார்ஜ் பிலாய்டின் படுகொலைக்கு எதிராக தொடங்கிய போராட்டங்களின் அலை தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது.

Be the first to comment

Leave a Reply