
கொழும்பில் சீன நாட்டு பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி, கேரன் ஹெபர் எவெனிவ் வீட்டுத்தொகுதியில் வசித்த 51 வயதான ஷென் ஷெரோன் என்ற சீனப் பெண்ணே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த வீட்டுத் தொகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அங்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சீன பெண் வீட்டு அறையில் கட்டிலின் மீது உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Be the first to comment