கட்சியில் இருந்து அனுஷா சந்திரசேகரன் நீக்கம்..!

சட்டத்தரணி அனுசா சந்திரசேகரனை கட்சியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னணியின் விசேடக் கூட்டமொன்று ஹட்டனிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றபோதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அமரர் சந்திரசேகரனின் மறைவுக்கு பின்னர், அவரை கௌரவப்படுத்தும் வகையில் அவரின் மகளான அனுசா சந்திரசேகரனுக்கு பிரதிசெயலாளர் நாயகம் பதவியினை வழங்கினோம்.

எனினும், சுயநலத்திற்காக அவர் கட்சியின் விதிமுறைகளை மீறி செயற்பட்டுவருவதன் காரணமாகவே அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக முன்னணியின் செயலாளர் நாயகம் லோரன்ஸ் தெரிவித்தார்.

அத்துடன், அனுசா சந்திரசேகரன் வகித்த பிரதி செயலாளர் நாயகம் பதவிக்கு ம.ம.முவின் சிரேஷ்ட உறுப்பினரும் பேராசிரியருமான விஜயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த கலந்துரையாடலில் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. ராதாகிருஷ்ணன் உட்பட முன்னணியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply