
இலங்கையில் மேலும் 05 பேருக்கு கொரோனா (கொவிட் 19) வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை 1819 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 50 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி தற்போது வரை 941 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்கான 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 864 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Be the first to comment