ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை..!

ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் இன சமத்துவ போராட்டத்துக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை

இன சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக போராடும் குழுக்களுக்கு 100 மில்லியன் டொலர் நன்கொடை அளிப்பதாக அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழில்முறைக் கூடைப்பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவான் மைக்கேல் ஜோர்டன் தெரிவித்துள்ளார்.

அவரும் அவரது ஜோர்டான் வியாபார அமைப்பும், 10 ஆண்டுகளில் பணத்தை விநியோகிப்பதாக அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

வேரூன்றியிருக்கும் இனவெறியை சமாளிக்கும் முயற்சியில் பணம் பல அமைப்புகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.

நிராயுதபாணியான கறுப்பின மனிதரான ஜோர்ஜ் ஃபிலாய்ட் இறந்ததைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜோர்டன் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நம் நாட்டில் கருப்பின மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஓய்வும்வரை அவர்களைப் பாதுகாக்கவும் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உறுதியளிக்கிறோம். கருப்பின மக்களின் இனச் சமத்துவம், சமூக நீதி, கல்விக்காக மைக்கேல் ஜோர்டன் மற்றும் ஜோர்டன் வியாபார அமைப்பு ஆகியவை இணைந்து அடுத்த 10 வருடங்களுக்கு 100 மில்லியன் டொலர் நிதியுதவி அளிக்கிறோம்’ என கூறப்பட்டுள்ளது.

ஜோர்டன் வியாபார அமைப்பின் கிரேக் வில்லியம்ஸ் இதுகுறித்து கூறுகையில், ‘கறுப்பின சமூகத்திற்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த இன்னும் பல வேலைகள் உள்ளன. நாங்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம்’ என கூறினார்.

Be the first to comment

Leave a Reply