3 படிகளில் பொதுத் தேர்தல்..!

எதிர்வரும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடாத்தவும் வாக்குகளை எண்ணும் பணிகளை இரண்டு நாட்களில் முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஓர் நாளில் வாக்கெடுப்பு நடத்தவும், ஒரு நாளில் வாக்குகளை எண்ணணுவும் அடுத்த நாளில் விருப்பு வாக்குகளை எண்ணவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் தினத்தில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் கிடைக்கும் ஆசனங்கள் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

அடுத்த தினத்தில் விருப்பு வாக்கு அடிப்படையில் யார் நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளனர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.

ஒவ்வொரு தினத்திலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி தேர்தல் கடமைகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா நோய்த் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் எனவும் சில இடங்களில் நோய் பரவுகை அதிகரித்தால் அந்த இடங்களில் வேறும் தினத்தில் தேர்தல் நடாத்தப்படுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply