யாழில் கொரோனாத் தொற்றுப் பரிசோதனை: ஒருவருக்கு தொற்று உறுதி..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்றுச் சனிக்கிழமை(06) 64 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெரியகாடு தனிமைப்படுத்தல் மையத்தில் தங்கியிருந்த 22 பேர், மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட 31 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த 8 பேர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் ஆகியோரே இவ்வாறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Be the first to comment

Leave a Reply