ஜனாதிபதியின் கை தளர்கின்றதா.? ; அதிகரிக்கும் துப்பாக்கி பயன்பாடு; பரஸ்பர மோதல் ஒருவர் பலி..!

மொனராகலை இத்தே கட்டுவ பகுதியில் பொலிஸாருடன் நடந்த பரஸ்பர துப்பாக்கி பிரயோக சம்பவத்தில் சந்தேகநபரொருவர் இன்று(05) உயிரிழந்துள்ளார்.

இதே பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவரைக் கைது செய்யச் சென்ற போது பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும், பலத்த காயமடைந்த சந்தேகநபரை மொனராகலை சிரிகல வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மேற்படி துப்பாக்கிப் பிரயோகத்தின் போது சந்தேகநபரால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply