இலங்கையில் சீனா மீது சிவில் தாக்குதல்; நுகர்வோர் உரிமை இயக்கம் ஏற்பாடு..! கொரோணா இழப்பீடு கோரியாம்..!

கொரோனா வைரசினால் இலங்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிற்கு இழப்பீடு கோரி சீன தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு.

கொழும்பில் சீன தூதரகத்திற்கு வெளியே அடுத்த வாரம் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.கொரோனா வைரஸ் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பிற்கு சீனா நஸ்டஈடுவழங்கவேண்டும் என கோரி பத்தாம் திகதி கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவுள்ளன என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித்விதானகே தெரிவித்துள்ளார்.இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளபோதிலும் தங்களிற்கு தொடர்ந்து போராடுவதற்கான உரிமையுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சுகாதார அதிகாரிகளின் விதிமுறைகள் காணப்படுவதால் தாங்கள் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறித்து சுகாதார அதிகாரிகளிற்கு அறிவுறுத்தியுள்ளதுடன் அவர்களின் ஆலோசனையை பெற தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு பொதுசுகாதார பரிசோதர்களை அழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply