சீனாவில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை! முடிவுகளில் வெளிவந்த உண்மை..!

சீனாவில் வுகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு குவாங்டாங் மாகாணத்தில் நேற்று ஒருவருக்கு வெளிநாட்டு தொடர்பின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் 326 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 245 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,638 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 1 கோடியே 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள வுகான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்கு 126 மில்லியன் டாலர் (சுமார் ரூ.945 கோடி) செலவாகும். இதுவரை 1 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

அதில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply