மட்டக்களப்பில் பிள்ளையான் – வியாழேந்திரன் குழுக்களுக்கிடையே வாள்வெட்டு மோதல்!

 
பிள்ளையான் குழுவுக்கும் பொதுஜன பெரமுன வேட்பாளர் வியாழேந்திரனின் ஆதரவாளர் குழுவுக்கும் இடையில் நடந்த வாள்வெட்டு மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை சந்திவெளியில் பிள்ளையான் குழு பொதுஜன பெரமுன வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரனின் ஆதரவாளர் குழு மீது கத்திகள் ரூபவ் வாள்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சந்திவெளியில் பிரதேச சபையில் போட்டியிட்ட பிள்ளையான் குழுவை சேர்ந்த ஒருவரை வியாழேந்திரன் குழு வாள்களால் வெட்டியிட்டி உள்ளனர்.

இவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே நேற்றைய தினம் பிள்ளையான் குழு வியாழேந்திரன் குழு மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் அரசு ஆதரவுடன் இயங்கி வரும் இந்த ஆயுதக்குழுக்களின் வன்முறைகள் அதிகரித்திருப்பது குறித்து மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தேர்தல் நெருங்க மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவின் வன்முறைகள் கடத்தல்கள் மரண அச்சுறுத்தல்கள் அதிகரிக்கலாம் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

இவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் நிலைமை என்னாகும் என்ற பெரும் கவலையும் அச்சமுமே இப்போது மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது.

பிள்ளையான் சிறையில் இருந்தாலும் பிள்ளையானின் சகாக்களின் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது.

அதேபோல ஆளும் கட்சியின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் வியாழேந்திரன் தரப்பும் வன்முறைகளை கையில் எடுத்துள்ளதாக மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

அண்மையில் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் ஒருவருக்கு கடத்தல் சம்பவம் தொடர்பாக ஒருவருட சிறை தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply