குளவிக் கொட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஜீவன் தொண்டமான்..!

அண்மை காலங்களில் தொடர்ச்சியாக மலையகத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தோட்டத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக குளவிகளை விரட்டுவதற்கான “ஸ்ப்ரே” வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களுக்கு அவர்கள் எவ்வளவு காலம் இன்னும் வேலை செய்திருப்பார்கள் என்ற கணக்கில் அதற்கான அவரது ஊதியத்தை அவரது குடும்பத்தாருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன அதற்கு தோட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்காக காப்பீடு திட்டமும் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான நிரந்தரத் தீர்வு ஒன்று மிக விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply