சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற நபர் வாளுடன் மடக்கிப்பிடிப்பு..!

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில், பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளொன்றைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபரொருவரை, கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பகுதியில் , இளைஞர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய, சம்பவ இடத்துக்கு சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை, அலைபேசியூாக தொடர்புகொண்ட பொலிஸார், கஞ்சா வாங்குவதைபோல பாவனை செய்து பேரம் பேசியுள்ளனர்.

இதனையடுத்து, சந்தேகநபர், இலக்க தகடு இல்லாத மோட்டார் சைக்களில், கஞ்சா மற்றும் வாள் ஒன்றுடன் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.

உடனடியாக செயற்பட்ட பொலிஸ் குழு, சந்தேக நபரை மடக்கிப் பிடித்ததுள்ளனர்.

அத்துடன் அவரிடமிருந்து 300 கிராம் நிறையுடைய 75 கஞ்சா பக்கெட்டுகளுடனும் 2 அடி வாள், அலைபேசி, கறுப்பு நிற மோட்டார் சைக்கிள் ஆகியற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள நபர் மருதமுனை, அல்மனார் வீதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கைதான நபரை நாளை கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

Be the first to comment

Leave a Reply