
கொரோனாத் தொற்று நெருக்கடி நிலைகளின்போது இலங்கை உள்ளிட்ட ஆசிய – பசிபிக் பிராந்தியங்களில் கருத்து சுதந்திரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் குறிப்பிட்டுள்ளார்.
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி பயணித்த நால்வருக்கும் விளக்கமறியல்
- இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படும் திகதி இடம் மற்றும் யார் அதற்கு தகுதிபெற்றவர்கள் குறித்த விபரங்களை மக்கள் அறிந்துகொள்ள முடியாத நிலை –சர்வதேச மன்னிப்புச்சபை
- ரஞ்சன் ராமநாயக்கவை பாதுகாப்பதற்கு ஹரின் பெர்னாண்டோவுக்கு முதுகெலும்பு இருக்கிறதா? சவால் விடுத்துள்ள ஹரின்
- அதிவேக வீதியில் விதிமுறைகளை மீறி காரில் பயணித்த நால்வரும் கைது
- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கைது
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனாத் தொற்றுக் குறித்து சிறிய குறைபாடுகளை விமர்சித்த அல்லது முன்னிலைப்படுத்தியதாகக் கூறப்படும் நபர்கள் கூட கைது செய்யப்பட்டு கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொது அதிகாரிகள் அல்லது கொள்கைகளை வெறுமனே விமர்சித்ததற்காக கைது செய்யப்படுவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என கடந்த ஏப்ரல் 25 ம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் ஆணையம் காவல்துறையினருக்கு அறிக்கையினை வழங்கியிருந்தது.
கொரோனா தொற்றுநோய் பரவலின் பின்னர் பல நாடுகளில் தணிக்கை மேலும் இறுக்கமடைந்துள்ளதாகவும், தமது அரசாங்கத்தை விமர்சிக்கும் நபர்களை தன்னிச்சையாக கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அல்லது தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்டவர்கள் பங்களாதேஷ், கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளனர்.
எனவே இவ்வாறான அசாதாரண நிலைகளின்போது அரசாங்கங்கள் நியாயமான சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அத்துடன் குறித்த சட்டங்கள் மக்களுக்கான இலகுபடுத்தப்பட்ட தண்டனைகளைப் பெற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளர் மைக்கல் பச்லெட் அறிவுறுத்தியுள்ளார்.
Be the first to comment