கிளிநொச்சியில் வயோதிபரை தாக்கிய ஆவா குழுவின் அடாவடி..!

கிளிநொச்சியில் ஆவாகுழு என தம்மை அடையாளப்படுத்திய குழுவொன்று வயோதிபர் மீது கொடூரத்தாக்குதலை நடத்தியுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் மேற்கில் வசிக்கும் 72 வயதான சிதம்பரப்பிள்ளை சின்னதம்பி என்பவரது வீட்டிற்கு கடந்த 2 ஆம் திகதி இரவு நுழைந்த 7 பேர் கொண்ட குழுவொன்று தம்மை ஆவா குழு என தெரிவித்துள்ள நிலையில் வீட்டினுள் இருந்த கதிரைகள் உட்பட பொருட்களை சேதப்படுத்தியுள்ளதுடன் வயோதிபர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது வயோதிபரை குறித்த வீட்டில் வசிக்க கூடாது என எச்சரித்த ரௌடிக்கும்பல் அவரை யாழ்ப்பாணத்தில் வரணிப்பகுதியில் உள்ள அவரது மற்றைய வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்து சென்றுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply