மெக்சிகோவில் பயங்கரம்; வேனுக்குள் துண்டு துண்டுகளாக வெட்டி போடப்பட்டிருந்த 7 பொலிஸ் அதிகாரிகளின் உடல்கள்..!

மெக்சிகோவில் பயங்கரம் வேனுக்குள் துண்டு துண்டுகளாக வெட்டி போடப்பட்டிருந்த 7 பொலிஸ் அதிகாரிகளின் உடல்கள்

திங்களன்று பொலிசாரை தொலைபேசியில் அழைத்த மர்ம நபர் ஒருவர், Cedros நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றின் அருகில் ஒரு வேன் நிற்பதாகவும், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துவிட்டு, தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

அதன்படி அங்கு சென்ற பொலிசார், அந்த வேனை சோதனையிட்டபோது, அந்த வேனில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.

அவை, கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட பொலிசாரின் உடல்கள் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள்.

நடந்தது என்னவென்றால், மெக்சிகோ சுரங்க தொழிலதிபர்கள் சிலருக்கு பாதுகாப்புக்காக 10 பொலிசார் அனுப்பப்பட்டிருந்தார்கள்.

அப்போது ஆயுதம் தாங்கிய கும்பல் ஒன்று அந்த பொலிசாரையும், இரண்டு குடிமக்களையும் கடத்திச் சென்றது.

கடத்தப்பட்ட பொலிசாரில் மூன்று பெண் பொலிசாரும், இரண்டு குடிமக்களும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.

மீதமுள்ள 7 பொலிசார்தான் இப்படி கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்டு வேன் ஒன்றில் போடப்பட்டிருந்தன.

Be the first to comment

Leave a Reply